Sunday, 23 May 2021

 

தோழர்களே ,
பெருமுயற்சி எடுத்து நம் உறுப்பினர்களிடம் இருந்து கொரோனா 2 நிவாரண நிதி சென்னை மாநில வங்கி கணக்கில் பற்று வைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 15 தேதி வரை நிவாரண நிதி பெறப்பட்டு , பிறகு அந்த மொத்த நிதிக்கு டிராப்ட் எடுத்து தமிழ் நாடு அரசிடம் கொடுக்கலாம் என எண்ணியுள்ளோம். தோழர்களே தாராளமாக நிதி வழங்குங்கள் . இக்கொடிய கொரோனாவிற்கு நம் தோழர்களில் பலரை பறி கொடுத்துள்ளோம்.நீங்கள் வழங்கும் ஒவ்வொரு நிதியும் உயிர் காக்கும் கவசம் என எண்ணி , தாராளமாக நிதி வழங்குவீர்.
இதுவரை நிதி கொடுத்துள்ளோர் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி . வணக்கம் .
மாநில செயலர் ,
சென்னை தொலைபேசி மாநிலம் 




Tuesday, 4 May 2021

 

வருந்துகின்றோம்! வருந்துகின்றோம்!
AIBSNLPWA குரோம்பேட் கிளையின் ஆயுள் உறுப்பினரும், கிளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிசெய்தவருமான அருமை தோழர் V.ஸ்ரீகுமார் DE (Retd)  அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிகாரிகள் சங்கத்தின் SNEA  மாநில செயலராக சிறப்பாக பணியாற்றியவர்.அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும்  தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாகவும் குரோம்பேட் கிளையின் சார்பாகவும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
S.தங்கராஜ்.
மாநில செயலர்

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...